கடன் தொல்லையால் உயிரை மாய்த்துகொண்ட இளம் குடும்பப்பெண்
#Jaffna
#Death
#Women
#Suicide
#Train
Prasu
2 years ago
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அரியாலை, நெடுங்குளத்தை சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா (27) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாய்த்தார். அவருக்கு ஒன்றரை வயதில் பிள்ளை உள்ளது.

கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும், அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.