மஹர சிறைச்சாலையில் 5 கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம்
#SriLanka
#Prison
#prisoner
Prathees
2 years ago
மஹர சிறைச்சாலையின் 05 கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை அவர்கள் சிறைச்சாலையின் கூரையில் ஏறியதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கூரையில் ஏறி போராட்டம் நடத்திய அனைத்து கைதிகளும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
சிறைக் கைதிகளின் வசம் புகையிலை இருந்ததை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுகளை கேட்டறிந்த பின்னர் தண்டனை விதிக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதையடுத்து சிறையின் மேற்கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர்.