ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல தடை

#Afghanistan #world_news #education
Prathees
2 years ago
ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல தடை

தலிபான்களின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மற்றுமொரு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பாடசாலைக் கல்வியை தடை செய்ய தலிபான் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தலிபான் ஆட்சிக்கு ஏற்ப, தலிபான் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் உள்ள பாடசாலை முதல்வர்களிடம் அனைத்து பெண் மாணவர்களையும் மூன்றாம் வகுப்பிலிருந்து மேல்நிலைக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர்.

 தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தொடர்ச்சியான கடுமையான விதிகள் பொருந்தும்.

 அதன்படி, ஆப்கானிஸ்தான் பெண்கள் பூங்காக்களில் நேரத்தை செலவிடவும்இ சுகாதார மையங்களில் சேரவும், அழகு நிலையங்களுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மேலும்இ ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு வேலைகளில் பணியாற்றுவதற்கு தலிபான் ஆட்சி தடை விதித்துள்ளது.

 பெண்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!