சீதுவையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் மீட்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
சீதுவ லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.