வலி. வடக்கு பிரதேசபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்

#SriLanka #Jaffna #Arrest #Police #Lanka4 #Fight
Kanimoli
2 years ago
வலி. வடக்கு பிரதேசபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான புளொட் அமைப்பின் அங்கத்தவர் சொக்கலிங்கம் சபேசன் (வயது 44) மீது 05.08.2023 தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தாக்கல் தொடர்பாக தெரிய வருவது, சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புலம்பெயர் மக்களின் உதவியில் குழாய் கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.

 இந்நிலையில் குறித்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் அயல் வீட்டுக்காரர் குழாய் அமைத்ததால் தன்னுடைய வீட்டு கிணறு பாதிப்படைகின்றது என தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் மீது கடும் தாக்கல் நடத்தியுள்ளார்.

 தாக்குதலில் காயமடைந்த பிரதேச உறுப்பினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!