தம்புத்தேகம நகரில் காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் முயற்சி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
தம்புத்தேகம நகரில் காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் முயற்சி!

தம்புத்தேகம மற்றும் அனுராதபுரத்தின் பௌதீக திட்டத்தை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. 

தம்புத்தேகம பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் பேசிய அவர்,  அரசாங்க அரசியல்வாதிகள் குழுவொன்று தம்புத்தேகம நகரில் காணிகளை கையகப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினர்  வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார்.  

இதேவேளை, விவசாயிக்கு விவசாயத்துக்கான தண்ணீர் பிரச்சினை குறித்தும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டார். 

விவசாயிக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், விவசாயி மட்டுமல்ல, நாட்டு மக்களும் பட்டினியால் வாட வேண்டிய நிலை ஏற்படும் எனவும்,  விவசாயிக்கு முறையாக தண்ணீர் வழங்க அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!