உடவளவை விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது -கமக்காரர் அமைப்பின் செயலாளர் இ.இளங்குமரன்
#SriLanka
#Lanka4
#famers
Kanimoli
2 years ago
உடவளவை விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அரசாங்கம் தண்ணீரை வழங்க வேண்டும் எமக்கும் இந்த நிலை வரும் எனவும் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர் இ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் 05.08.2023 கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த கருத்தை அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், ரணில் அரசாங்கம் மின்சாரத்திற்காக 25 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்த நெல்லுக்கு தண்ணீரை வழங்காது இருக்கின்றது. இதனால் 30000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ரணில் அரசாங்கம் பாரிய பொருளாதார குற்றத்தை செய்து வருகிறது. விவசாயிகள் மீது கையை வைத்த முன்னாள் ஜனாதிபதி கூட வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என தெரிவித்தார்.