13 ஆவது திருத்தம் குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ள தமிழரசு கட்சி!
13 ஆவது சீர்த்திருத்தம் குறித்த நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்க தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டின்போது 13 ஆவது திருத்தம் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறியிருந்தார்.
இதற்கமைய தமிழரசு கட்சியானது தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளது. இது சம்பந்தமான கலந்துரையாடல், சிரேஷ்ட தலைவரான சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு இடையில் நடைபெற்றுள்ளது.
இதன்படி சம்பந்தனின் வழிக்காட்டலின் பிரகாரம், சுமந்திரனால் தமிழரசு கட்சியின் பரிந்துரைகளை உள்ளடக்கிய வரைவொன்றை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டின் போது அதிகாரபகிர்வு, மாகாண சபை தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடல் சுமூகமற்ற நிலையில் நிறைவுக்கு வந்துள்ள சூழலில் அதுகுறித்து விரைவில் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.