சர்வதேச விமான நிலையங்களால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு!
மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய சர்வதேச விமான நிலையங்களால் 2345 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் எந்தவொரு வருமானமும் கிடைக்கப்பெறவில்லை எனவும், இருப்பினும் அதற்காக 8.7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் உண்ணிக்கை பத்து இலட்சம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த வருடம் இந்த விமான நிலையத்தின் ஊடாக 11577 பேரே பயணித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக கடந்த ஐந்து வருடங்களில் 103,324 பயணிகளே இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.