ஜனாதிபதி தலைமையில் மீண்டும் சர்வ கட்சி மாநாடு: 13 குறித்து கலந்துரையாட அழைப்பு

#SriLanka #Ranil wickremesinghe #13th Amendment Act
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி தலைமையில் மீண்டும் சர்வ கட்சி மாநாடு: 13 குறித்து கலந்துரையாட அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 பொலிஸ், காணி அதிகாரங்களை தவிர 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட உள்ளது.

 இந்த நிலையில் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 இதேவேளை 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்டினட் ஜெனரல் ஜகத் டயஸ் மாநாடு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.

 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக அதனை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!