சமூக ஊடக தளங்களில் இதய குறியீடை அனுப்பினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்

#Social Media #Ban #SaudiArabia
Prasu
2 years ago
சமூக ஊடக தளங்களில் இதய குறியீடை அனுப்பினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் அனைத்து பயனர்களும் ‘இதயம்’ ஈமோஜியைப் பொதுவாக பயன்படுத்திக்கொண்டு தான் இருகின்றார்கள்.ஆனால் தற்போது ​​குவைத்தில், இந்தச் செயல் சவூதி அரேபியாவில் இருந்ததைப் போலவே குற்றமாக கருதப்படும் என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

குவைத்தில், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக வலைப்பின்னல் தளத்திலும் ஒரு பெண்ணுக்கு ‘இதயம்’ எமோஜியை அனுப்புவது அநாகரீகமான செயலாகக் கருதப்படுகிறது, 

இது சட்டத்தால் தண்டிக்கப்படும் என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2,000 குவைத் தினார்களுக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டும்.

இதேபோல் சவுதி அரேபியாவிலும், ‘ரெட் ஹார்ட்’ எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

மேலும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100,000 சவுதி ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியது.

 இதை தொடர்ந்து குவைத் நாட்டிலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இளைஞர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!