ஈரானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யும் அலிசப்ரி!
#SriLanka
#Ali Sabri
#Iran
#Visit
Mayoorikka
2 years ago
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (04) முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் ஈரான் ஜனாதிபதி டாக்டர். செய்ட் இப்ராஹிம் ரைசி (Dr. Seyed Ibrahim Raisi) ஐச் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனத்தில் விரிவுரை ஆற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.