சீனாவில் கற்றல் திறன் குறையாது இருக்க செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

#India #China #children #world_news #child groomin #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
சீனாவில் கற்றல் திறன் குறையாது இருக்க செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

குழந்தைகள் மற்றும் சிறார் மத்தியில் செல்போன் உபயோகத்தை கட்டுப்படுத்த சீனா அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதற்காக செல்போன் தயாரிப்பு நிலையிலேயே கட்டுப்பாடுகளை புகுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செல்போன்கள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு, புதிய நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. இதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே இனி செல்போன் பயன்படுத்த முடியும்.

அதிலும் வயதுக்கேற்ப குழந்தைகள் மற்றும் சிறார் மத்தியிலான செல்போன் பயன்பாட்டினை சீனா வரையறுத்து வைத்துள்ளது. அதன்படி 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறார் ஒரு மணி நேரமும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 2 மணி நேரமும் செல்போனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்க தடை விதிக்கப்பட இருக்கிறது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பையும் ஸ்மார்ட்போனில் இணைக்க, தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளின் வரம்பற்ற செல்போன் உபயோகம் அவர்களின் உடல் மற்றும் மனம் சார்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகளவில் பெற்றோர்களை தவிப்புக்கு ஆளாக்கும் இந்த போராட்டத்தில், சீனாவின் அதிரடி ஏற்பாடு இதர நாடுகளுக்கும் முன்னுதாரணமாக மாற வாய்ப்புள்ளது. தொழில்நுட்ப அடிப்படையில் சீனா விரும்பும் மாற்றங்கள் எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்விகள் எழுந்தாலும், திட்ட அளவில் சீனாவின் முயற்சி உலகமெங்கும் சிலாகிக்கப்பட்டும் வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!