மகாவலி பிரதேசத்தில் 15,000 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்க முடிவு

#SriLanka #Lanka4 #land
Kanimoli
2 years ago
மகாவலி பிரதேசத்தில் 15,000 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்க முடிவு

மகாவலி பிரதேசத்தில் 15,000 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்

. 05 வருடங்களுக்கு மேலாக காணி உரிமை இல்லாத குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார். இதேவேளை, மகாவலி பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 குடும்பங்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அனைவரும் ஒரே பாதையில் நிலையான நாடு என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரொஷான் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!