உயிரிழந்த குழந்தை சிங்களவராக இருந்திருந்தால் நாடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்: அசாத் சாலி
பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் காரணமாக உயிரிழந்த குழந்தை சிங்களவனாக இருந்து அந்த வைத்தியர் முஸ்லிமாக இருந்திருந்தால் இனவாதிகளால் நாடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
குழந்தையின் இரு சிறுநீரகங்களில் ஒன்று நன்றாக இருந்தால், இரண்டும் ஏன் அகற்றப்பட்டன?, அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைகள் இடம்பெறுவதாகவும், தரகர்கள் ஊடாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணைய சஉயிரிழந்த குழந்தை சிங்களவராக இருந்திருந்தால் நாடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்: அசாத் சாலினலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.