இந்தோனேசியாவில் 8 மாதங்களுக்கு முன் உயிரிழந்த வர்த்தகரின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது

#SriLanka #Death
Prathees
2 years ago
இந்தோனேசியாவில் 8 மாதங்களுக்கு முன் உயிரிழந்த வர்த்தகரின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் உயிரிழந்த இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 கொழும்பு-07 இல் வசித்து வந்த 41 வயதான திரு.ஒனேஷ் சுபசிங்க, கடந்த ஜனவரி 17ஆம் திகதி, அவரது 4 வயது மகள் , தனது பிரேசிலைச் சேர்ந்த மனைவி மற்றும் அவரது நண்பருடன் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

 பயணத்திற்கு புறப்பட்ட பின்னரும் தினமும் இலங்கையில் உள்ள தனது சகோதரிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஆனால் ஜனவரி 31 முதல், அவர் போன் செய்வதை நிறுத்தியதால், சகோதரி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்து, இந்த தொழிலதிபரைப் பார்க்கச் சொன்னார்.

 அதன்படி செயல்பட்ட ஹோட்டல் ஊழியர்கள், அவர்கள் தங்கியிருந்த அறையில் இந்த தொழிலதிபரின் சடலத்தை கண்டெடுத்தனர்.

 சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!