நல்லூர் திருவிழா: ஏலத்திற்கு அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!

#SriLanka #Thiyagendran Vamadeva #TCT
Mayoorikka
2 years ago
நல்லூர் திருவிழா: ஏலத்திற்கு அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!

நல்லூர் திருவிழாவில் கூடாரம் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கான அரிய சந்தர்ப்பம் எதிர்வரும் 21 ஆம் திகதிஆரம்மாகவுள்ள நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு வியாபார கூடங்களை அமைப்பதற்கான ஏல கட்டணத்திற்கு உதவி செய்வதற்கு TCT உரிமையாளர் தியாகி முன்வந்துள்ளார்.

 நல்லூர் திருவிழாவின் போது விற்பனை கூடாரங்கள் ஏலத்தில் எடுப்பதற்கு 50  ஆயிரம் செலவு செய்தால் போதும். ஆனால் சில விற்பனை முதலாளிமார் ஏலத்தில் ஐந்து லட்சம் வரை ஏத்திவிட்டு சிறு வர்த்தகர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

 இதன் காரணமாக வாமதேவன் தியாகி சிறு வர்த்தகர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போது, 

 50 ஆயிரம் ரூபாவிற்கு எடுக்க வேண்டிய கச்சான் கூடாரங்களை அதற்கு கூட எடு்க்கவேண்டிய அவசியம் இல்லை. 

மாநகராட்சியினர் சோலை வரி என்றல்லொம் எடுக்கின்றார்கள் அதைவைச்சு என்ன செய்கின்றார்களோ தெரியாது. தற்பொழுது மாநகரசபைக்கு அதிகாரம் இல்லை. 

ஆணையாளர் மாத்திரம் தான் ஏல விற்பனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். ஆகவே இதற்கு தடங்களாக உள்ளவர்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

 ஆகவே அதிக காசிற்கு ஏலத்தில் எடுக்காமல் குறைந்தளவான தொகைக்கு எடுக்க சிறு வியாபாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். அத்தோடு அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!