ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்! வாசுதேவ

#SriLanka #Election
Mayoorikka
2 years ago
ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்! வாசுதேவ

மாகாணசபை முறைமையுடன் ஒற்றையாட்சியும், ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக சர்வக்கட்சி மாநாடு இடம்பெற்றது. இதில் ஜனாதிபதியோ தனது தனிப்பட்ட யோசனையை எம் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முயன்றார்.

 ஆனால், அங்கு கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தான் வலியுறுத்தினார்கள். இதனால், அவருக்கு தனது திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

 ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது, இறுதியில் வழங்கப்படவுள்ள அதிகாரங்களைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!