நாட்டை விட்டு தப்பி ஓடிய பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர்: மனைவி மூலம் ராஜினாமா கடிதம்

#SriLanka #Canada #America #Oil
Mayoorikka
2 years ago
நாட்டை விட்டு   தப்பி ஓடிய பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர்: மனைவி மூலம் ராஜினாமா கடிதம்

இலங்கை பெற்றோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஒருவர் அமெரிக்கா செல்வதாக கூறிவிட்டு கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 இலங்கைக்கு கச்சா எண்ணெயை இறக்கும் போது பீப்பாயில் இருந்து எண்ணெய் மாயமான சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்த போது இந்த அதிகாரி விடுமுறை எடுத்து அமெரிக்கா சென்றிருந்தார்.

 மூன்று மாத பயணத்தில் இருப்பதாக கூறி விடுப்பு எடுத்த நிலையில், தனது மனைவி மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 தனக்கு கனடாவில் வேலை கிடைத்துள்ளதாகவும், பணியை ராஜினாமா செய்வதாகவும் மனைவி மூலம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், கச்சா எண்ணெய் பீப்பாய்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள இந்த அதிகாரி இலங்கைக்கு வர வேண்டும் என எண்ணெய் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!