முட்கொம்பன் காட்டுப் பகுதியில் தீ பரவல் - பூநகரி பிரதேச சபை கட்டுப்படுத்தியது
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#fire
Kanimoli
2 years ago
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்து வந்த நிலையில் இன்றைய தினம் பாரிய அளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் தயாபரன் சென்று கண்காணித்ததுடன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கும் தகவல் வழங்கியுள்ளர். தொடர்ந்து பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீப்பரவலை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், காட்டுப்பகுதிக்குள் செல்வதற்கு பாதை இல்லாத நிலை ஏற்பட்டது.

அப்பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.