ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி மாநாட்டை எதிர்வரும் 10ஆம் திகதி நடத்த தீர்மானம்
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி மாநாட்டை எதிர்வரும் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவால் நீக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (02) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்திலேயே அது இடம்பெற்றுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.