பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
#India
#Death
#world_news
#Attack
#GunShoot
#Terrorist
#Breakingnews
#Died
#Killed
Mani
2 years ago

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள சாவோ பவுலோ நகரம் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள கவுருஜா மற்றும் சான்டோஸ் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில், பயங்கரவாதிகள் ஒரு போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, தப்பியோட முயன்ற பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறப்பு படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பேரில் இதுவரை 13 பயங்கரவாதிகளை அந்த நாட்டின் சிறப்பு ராணுவ பிரிவினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



