சிலியில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் 5 விமானப்படை வீரர்கள் பலி
#India
#world_news
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

தென் அமெரிக்க நாடான சிலியின் தெற்கே லாஸ் லகோஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை தளம் ஒன்றுசெயல்படுகிறது. இந்த தளத்தில் இருந்து இரவு நேர பயிற்சிக்காக ஹெலிகாப்டர் புறப்பட்டது.
வானில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள், 2 விமானப் படை வீரர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக ராணுவம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.



