பதுர்தீனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை
யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வில்பத்து சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாதுகாக்கப்பட்ட காடுகளை அனுமதியின்றி அகற்றி அப்பகுதிகளில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவது தொடர்பாக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதுர்தீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மனு விசாரணை முடியும் வரை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் நேற்று (02) பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை ரத்து செய்யுமாறு ரிஷாத் பதுர்தீன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கிய திரு. மலல்கொடஇ காமினி அமரசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுக்கள் மீதான விவாதத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் திகதி தொடங்கவும் நீதிமன்றம் திகதி நிர்ணயம் செய்தது.
சுற்றாடல் நீதி மய்யம்இ அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உட்பட பல தரப்பினரும் மேற்படி காடுகளை அழித்து அந்த பிரதேசங்களில் அனுமதியின்றி முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதற்கு எதிராக உள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்இ அழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான செலவை றிசாத் பதுர்தீனிடம் இருந்து வசூலிக்க தீர்மானம் பிறப்பித்திருந்தது.