நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது!

#SriLanka #Central Bank #Lanka4
Thamilini
2 years ago
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது!

இந்த வருடத்தின் முதல் பாதியில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் கணிசமான அளவு குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  

ஜனவரி முதல் ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தில், இறக்குமதி 18.6 சதவீதம் குறைந்துள்ளது எனவும்,  செலவு 8.16 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த காலகட்டத்தில்  இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானமும் 10 சதவீதம் குறைந்து 5.87 பில்லியன் டொலர்களாக உள்ளது.  

இதேவேளை கடந்த ஜூன் மாதத்தில் இறக்குமதிச் செலவு 11.6 சதவீதம் ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

அந்த மாதத்தில் எரிபொருள் இறக்குமதி செலவு 45 சதவீதம்  அதிகரித்ததே இதற்குக் காரணம் என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி வருமானம் 19.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அமெரிக்கா,  ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் முக்கிய சந்தைகளுக்கு ஆடை ஏற்றுமதி மூலம் வருவாய் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.  

இதேவேளை இவ்வருடம் 280 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!