அரசாங்கம் காலத்தின் தேவை கருதி செயற்பட வேண்டும்!
சுகாதாரத் துறையில் முன்மொழியப்பட்ட புதிய சீர்திருத்தங்களில் அரசாங்கம் முன்னுரிமைகளைக் கண்டறியத் தவறி விட்டது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள GMOA ஊடகப் பேச்சாளர் டாக்டர் சம்மில் விஜேசிங்க, தற்போது காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளான, மருந்து பற்றாக்குறை, மற்றும் தரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலாக புதிய மருத்துவச் சட்டத்தை உருவாக்குவதும், என்எம்ஆர்ஏ சட்டத்தை ரத்து செய்வதும் காலத்தின் தேவை இல்லை எனவும், உண்மையில், தற்போதுள்ள என்எம்ஆர்ஏ, புதியதை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக மருந்துக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது அவசியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள சட்டத்தை சரியான முறையில் அதிகாரம் செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்டகால முன்மொழிவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் மிகவும் அழுத்தமான பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.