இந்திய ரூபாய் இலங்கையில் செல்லுபடியாகுமா? மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
இந்திய ரூபாய் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயம் அல்ல என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரூபாய் குறித்து தற்போது பரவி வரும் தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களாக வங்கித்தொழில் சட்டம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2022 ஒகஸ்டில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி இந்திய ரூபாயுடன் 16 நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த 16 நாணயங்களை அங்கீகரித்ததன் முக்கிய நோக்கம் நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை ஊக்குவிப்பதாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.