டொனால்ட் டிரம்ப் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

#America #Case #Trump
Prasu
2 years ago
டொனால்ட் டிரம்ப் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. 

அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு நான் செல்வதை தடுக்கும் விதமாக தீய எண்ணத்துடன் முயற்சி நடைபெறுகிறது என தெரிவித்து உள்ளார்.

 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள டிரம்ப், ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் தற்பொழுதும் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!