துல்ஹிரியில் பேரூந்து விபத்து - ஒருவர் பலி - 22 பேர் காயம்
#SriLanka
#Accident
#Bus
Prathees
2 years ago
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
தொம்பே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்கமுவ டிப்போவிற்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்று துல்ஹிரிய தபால் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.