மணத்தக்காளி கீரை தண்ணி சாறு செய்முறை

#India #Health #Healthy #Recipe #Food #Tamilnews #Tamil Food
Mani
6 months ago
மணத்தக்காளி கீரை தண்ணி சாறு செய்முறை

தேவையான பொருட்கள்:

 • 1 கட்டு மணத்தக்காளி கீரை
 • 1 கப் அரிசி களைந்த தண்ணீர்
 • 1 வெங்காயம்
 • 2 பச்சை மிளகாய்
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1/2 கப் தேங்காய் பால்
 • 1/2 தேக்கரண்டி கடுகு
 • 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு
 • 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1 மேசைக்கரண்டி எண்ணெய்

செய்முறை:

 • பொட்டுகடலை, மிளகு சேர்த்து போட்டு பொடி செய்து கொள்ளவும், கீரையை ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து வைத்திருக்கும் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும்.
 • அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை போட்டு உப்பு சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும்.
 • கொதித்ததும் தேங்காய் பால், ஊற்றி பொட்டுக்கடலை, மிளகு பொடியை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சுவையான மணத்ததக்காளி தண்ணீர் சாறு ரெடி.செய்முறை
 • பொட்டுகடலை, மிளகு சேர்த்து போட்டு பொடி செய்து கொள்ளவும், கீரையை ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து வைத்திருக்கும் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும்.
 • அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை போட்டு உப்பு சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும்.
 • கொதித்ததும் தேங்காய் பால், ஊற்றி பொட்டுக்கடலை, மிளகு பொடியை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சுவையான மணத்ததக்காளி தண்ணீர் சாறு ரெடி.
 • மணத்தக்காளி கீரை தண்ணி சாறு செய்முறை
மேலும் மரண அறிவித்தல்களுக்கு