அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்

#SriLanka #Australia #Attack
Prathees
2 years ago
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் இலங்கை குடும்பம் ஒன்று வசிக்கும் வீடு மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ பகுதியில் உள்ள இலங்கை குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டிற்கு நான்கு பேர் வந்த விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

 அவர்கள் கருப்பு உடை அணிந்து, கூர்மையான ஆயுதங்களுடன் வந்தனர். எவ்வாறாயினும், தாக்குதல் அபாயத்தை எதிர்கொண்ட இலங்கையர் உடனடியாக அவர்களுக்கு பதிலளித்தது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

 இக்குழுவினர் தப்பிச் செல்ல முற்பட்ட போது, ​​இலங்கையர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் காரையும் சந்தேக நபர்களையும் படம் எடுக்க விரைந்தார்.

 தாக்குதலுக்கு வந்தவர்களின் முக்கிய நோக்கம் தனது காரை கடத்துவதே என சம்பவத்தை எதிர்கொண்ட இலங்கையர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 தற்போது, ​​சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய குழுவைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!