பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்குமிடையே மீண்டும் போர்?

இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்குமிடையேயான போர ஏற்கனவே இரு முறை நிகழ்ந்துள்ள நிலையில் மேலும் இனி இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்றும் இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில் இனி மேலும் ஒரு போருக்கு நாடு தயாராக இல்லை என்றும் எனவே இந்தியாவுடன் இனி இப்போதைக்கு போர் எதுவும் இருக்காது என்றும் பாகிஸ்தான் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாக உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் போர் நடத்துவது தேவையற்ற ஒரு விடயம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



