ஈழத்தமிழ் அறிவிப்பாளர் ஒருவர் லண்டனில் மரணம்!

#Death #Accident #Lanka4
Thamilini
2 years ago
ஈழத்தமிழ் அறிவிப்பாளர் ஒருவர் லண்டனில் மரணம்!

ஈழத்தமிழ் அறிவிப்பாளரளரான விமல் சொக்கநாதன்  லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி நேற்று (2.08) உயிரிழந்துள்ளார். 

பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் தன்னுடைய 75 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 

தனது வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வானொலியில் ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் இலண்டன் பி.பி.சி வரை அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 வானொலிக் கலைஞரான விமல் சொக்கநாதன், ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர்.

 சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். 

இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றிய இவர், பிபிசி தமிழோசையிலும் அறிவிப்பாளராக இருந்தார்.

 விமல் சொக்கநாதன் எழுதிய ‘லண்டனில் இருந்து விமல்’ என்ற நூல் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!