இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி விளக்கம்!

#India #SriLanka #Central Bank #Lanka4
Thamilini
2 years ago
இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி விளக்கம்!

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை விளக்கும் வகையில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், ,  உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் செட்டில்மென்ட்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே பயன்படுத்தப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பதால்,   உள்நாட்டு கொடுப்பனவுகள் செட்டில்மென்ட்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்த முடியாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!