கானுன் புயல் எதிரொலி: 500 விமான சேவைகள் ரத்து

#India #China #Flight #world_news #Tamilnews
Mani
2 years ago
கானுன் புயல் எதிரொலி: 500 விமான சேவைகள் ரத்து

ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. புயல் கடல் நோக்கி நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடந்தது. இதன்போது, ​​காற்றின் வேகம் மணிக்கு 198 கிலோ மீட்டர் வேகம் வரையில் வீசக்கூடும் என நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம், கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, நேற்று 500-க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

தற்போது, ​​சூறாவளி கானுன் "மிகவும் வலுவான" நிலையில் உள்ளது. மையத்தில் அழுத்தம் 935 ஹெக்டோபாஸ்கல்களை எட்டியுள்ளது, மேலும் வினாடிக்கு 150 முதல் 210 அடி வரை காற்றின் வேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4