சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளப்பெருக்கு. 20 பேர் உயிரிழப்பு!
#China
#Death
#world_news
#Lanka4
#Flood
#வெள்ளம்
#சீனா
#மரணம்
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்திற்கும் அதிகமாக மழை பெய்து வரும் காரணத்தால் அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறியதாவது: பெய்ஜிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் முழ்கின.
சாலைகளிலும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் 20 போ் பலியாகினா்; 27 போ் மாயமாகினா் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
பெய்ஜிங் பிராந்தியத்தில் மிதமான மழையே பெய்வது வழக்கம். அங்கு இந்த அளவுக்கு மழை பெய்ததன் விளைவாகவே அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமையானது மிகவும் அபூா்வமானதாகும் என்று கூறப்படுகிறது.



