கைவிடப்பட்டுள்ள சுகாதார தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
#SriLanka
#strike
#doctor
Mayoorikka
2 years ago
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரியே சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் நாளைய தினம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்திருந்தது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றதை அடுத்து, தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.