தரமற்ற மருந்துகளை விநியோகிஸ்த்த பாராளுமன்ற உறுப்பினரின் மருமகன்!
#SriLanka
#Health
#Medicine
Mayoorikka
2 years ago
இந்த நாட்டிலுள்ள மருந்து விநியோகஸ்தர்களில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனமே சுகாதார அமைச்சுக்கு அதிகளவான குறைபாடுள்ள மருந்துகளை வழங்கியமை தற்போது தெரியவந்துள்ளது.
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மகளின் கணவருக்குச் சொந்தமான நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 10%-24% வரை குறைபாடுள்ளவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றொருவர் எதிர்க்கட்சி எம்.பி.யினுடைய நிறுவன உரிமையாளரின் உறவினர். இருவரும் சமகால பள்ளி நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் இந்நிறுவனம் வழங்கிய கணிசமான அளவு மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது.