அரச நில அளவை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
#SriLanka
#Protest
#strike
Mayoorikka
2 years ago
அரச நில அளவை அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கு ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பதவி உயர்வு, வளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நில அளவை சங்கத்தின் தலைவர் துமிந்த உதுகொட தெரிவித்துள்ளார்.