13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிக்கை!
#SriLanka
#Sri Lanka President
#Tamil People
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையில் விசேட அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான பிரேரணைகளையும் அவர் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரங்கள் இன்றி திருத்தத்தை வலுப்படுத்தும் வகையில் அது தொடர்பான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது குறித்தும் இங்கு விளக்கமளிக்க ஜனாதிபதி தயாராகி வருகிறார்.
13வது அரசியலமைப்பை நடைமுறைபடுத்த ஜனாதிபதி முயற்சித்து வருகின்ற போதிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாதமையே ஜனாதிபதியின் பணிகளுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.