விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்துவோம் - நாமல்!
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியு றுத்துவோம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், நாங்கள் எப்பொழுதும் மக்களுக்காகவே நிற்கின்றோம்.இந்த அரசாங்கத்தின் சலுகைகளை எம்மால் இயன்றவரை கிராமங்களுக்கு கொண்டுசெல்கின்றோம்.
சமீபகாலமாக பாதுகாப்பு குறித்து பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்னையில் எங்கள் குழு எம்.பி.,க்கள் தலையிட்டனர். இன்று மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது.
நெல் கொள்முதல் துவங்கினாலும், கிடைக்கும் விலையில் திருப்தி அடைய முடியாது. உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இது குறித்தும், விலை குறித்தும் பேசினர். வறட்சி நிலவும் மாகாணங்கள் உள்ளன, அந்த மாகாணங்களில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் உள்ளது.
வறட்சி காரணமாக பயிர்கள் சேதம் அடைந்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நீதி என்ன என்பது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்து பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.