உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விவசாய அமைச்சர் விடுத்த பணிப்புரை!
#SriLanka
#government
#Food
#Minister
Mayoorikka
2 years ago
எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு விளை நிலங்களிலும் குறுகிய கால உணவுப் பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இடைப்பட்ட பருவத்தில் வெண்டைக்காய் மற்றும் கௌபி சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.
நிலவும் வறட்சி நிலை காரணமாக சில பிரதேசங்களில் இடைநிலைப் பருவப் பயிர்ச்செய்கைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது அங்கீகரிக்கப்பட்ட போதிலும், பல பிரதேசங்களில் இடைநிலைப் பருவத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.