சம்பள மானியம் வழங்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்!

#SriLanka #லங்கா4
Thamilini
2 years ago
சம்பள மானியம் வழங்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்!

அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு சம்பள மானியம் வழங்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

உண்மையான ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கும்போது அதை எதிர்ப்பது பணம் படைத்தவர்கள்தான் எனக் கூறிய அவர்,  25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த முறை மாற்றப்பட்டு, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், குறைகள் இல்லாமல் இல்லை எனவும் கூறினார். 

 எதிர்காலத்தில் அந்த குறைகளை களைய மட்டும் பாடுபட மாட்டோம். இந்த நாட்டில் உள்ள தகுதியான குழுக்களுக்கு மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்க பாடுபடுகிறோம் எனவும் அவர் மேலும் கூறினார். 

அத்துடன் சமுர்த்தி இயக்கத்தை குறைக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு வருடத்திற்கு முன்பு மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும், சில அரசியல் தலைவர்கள் போராட்டத்தை பிழைப்பிற்காக நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!