இலங்கை - இந்தியாவை இணைக்க இராமர் பால திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டம் குறித்து ஆராய்வு!

#SriLanka #லங்கா4
Thamilini
2 years ago
இலங்கை - இந்தியாவை இணைக்க இராமர் பால திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டம் குறித்து ஆராய்வு!

இலங்கை, இந்தியாவை இணைக்கும் இராமர் பாலதிட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது இலங்கை துறைமுகங்களுடன் தொடர்பை அதிகரிப்பதற்காக தரைரீதியிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டது. 

 நீண்டகாலத்திற்கு முன்னர் இதேயோசனை முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பாலத்தை நிர்மாணிப்பதால், இந்து மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

இதன்காரணாக இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான தரைவழித் தொடர்பை ஏற்படுத்த வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்படுவதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், புதிய பாதையொன்றை உருவாக்குவது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இராமர்சேது பாலத்தை விட இது நீளமாக காணப்படும் என தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!