நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு!
#SriLanka
#Lanka4
#power cuts
Thamilini
2 years ago
விரைவில் நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், இதனால் தென் மாகாணங்களில், 04 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.