கலாஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Lanka4
Thamilini
2 years ago
நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01.08) இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய சிறுவன் ஆபத்தான நிலையில். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் சில நண்பர்களுடன் கலாஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கலாஓயாவில் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.