கலிபோர்னியாவில் ஆபத்தான பக்டீரியாக்களுடன் இயங்கிவந்த ஆய்வகம் சுற்றிவளைப்பு!

கலிபோர்னியாவில் உள்ள ஒரு கிடங்கிற்குள் செயல்படும் சட்டவிரோத மருத்துவ ஆய்வகம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வகத்திற்குகள் நூற்றுக்கண்காகன இறந்த எலிகள் மற்றும் குப்பிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியாவில் பதிவு செய்யப்படாத நெவாடாவை தளமாகக் கொண்ட நிறுவனமான Prestige BioTech மூலம் நடத்தப்படும் இந்த ஆய்வகம், COVID-19, E. Coli, மலேரியா, HIV, ஹெபடைடிஸ் மற்றும் ஹெர்பெஸ் உட்பட குறைந்தது 20 ஆபத்தான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் இயங்கிவந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி. ரீட்லி நகரத்தின் குறியீடு அமலாக்கக் குழு கடந்த டிசம்பரில் ஆய்வகத்தைக் கண்டுபிடித்தது எனவும், அவர்கள் கதவைத் தட்டியபோது, அனுமதியின்றி வணிகம் நடப்பதை உணர்ந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 1,000 நோயுற்ற மற்றும் உயிரியல் பொறியியல் எலிகளை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும், அவற்றில் சுமார் 200 ஏற்கனவே இறந்துவிட்டன எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே குறித்த ஆய்வகத்தில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் COVID மற்றும் கர்ப்ப பரிசோதனைகளை கண்டறிவதற்காக நிறுவப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



