பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான நபர் 127 வயதில் உயிரிழப்பு

#Death #Brazil #Old
Prasu
2 years ago
பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான நபர் 127 வயதில் உயிரிழப்பு

பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் ஜோஸ் பாலினோ கோம்ஸ் வயது மூப்பு காரணமாக தனது 127வது வயதில் காலமானார். அடுத்த வாரம் 128வது வயதில் அடிவைக்க இருந்த நிலையில், கோம்ஸ் உயிரிழந்துள்ளார். 

கோம்ஸின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மினாஸ் ஜெரைஸில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் கோம்ஸ் இறந்துள்ளார். 

இதையடுத்து, அவரது உடல் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவில் உள்ள காரிகோ டாஸ் பியால்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. 

கோம்ஸின் திருமணச் சான்றிதழின்படி 1917ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி பிறந்தார். 

இவர், உலகப் போர்கள் மற்றும் மூன்று தொற்று நோய்களிலிருந்து தப்பியவர். கோம்ஸுக்கு ஏழு குழந்தைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!