மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்
#SriLanka
#Death
Prathees
2 years ago
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் (01) அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட்டிருந்த சிலர் மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.