இலங்கையில் 13 வது திருத்த சட்டத்தை நிறைவேற்ற இந்தியா பச்சைக்கொடி?
பல வருடங்களாக வெறும் வாய்ப்பேச்சில் இருக்கும் 13 ஆவது திருத்த்சட்டம் அமுலாக்கவும் உயிர் கொடுக்கவும் இந்தியா தனது சுய நல நோக்கோடும் திருகோணமலையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் தமிழ் அரடியல்வாதிகளுக்கு உறுதி அளித்துள்ளது.
அவ்வகையிலே 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களை கௌரவமாக வாழ வைக்கும் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றம் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், இந்திய உதவி உயர்ஸ்தானிகர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பிலும் இலங்கையில் இந்தியா எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பின் எம்.பிகளுக்கு விளக்கமளித்தார்.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடைபெற வேண்டுமென்பதில் இந்தியாவும் பிரதமர் மோடியும் உறுதியாக இருப்பதாகவும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதில் இந்தியா காத்திரமாக செயல்படுவதாகவும் உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.
இ ந் தியா இதற்கு முயன்றாலும் பௌத்த பிக்குக்கள், இஸ்லாமியர்கள், சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், இஸ்லாமியர்கள், எதிரான சிங்கள, இஸ்லாமிய மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் சம்மதம் இல்லாமல் சாத்தியமே இல்லை.
“வருவது வரட்டும் மக்களுக்கு எது நன்மையோ அதுவே இலங்கைக்கும் தேவை. மக்கள் தீர்ப்பே மகான் தீர்ப்பு”